விவசாயிகளுக்கு நற்செய்தி: இன்று முதல் பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு.!

Default Image

ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணையை இன்று முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 120 நாட்களுக்கு 7,776 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. தற்போது தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் 15-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் திறப்பு செய்யப்படும் என்றும் 3 நாட்கள் இடைநிறுத்தம் செய்து, 241.92 மில்லியன் கன அடி தண்ணீரைத் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 241.62 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுவதால், கோபி, பவானி, அந்தியூரில் உள்ள 24,505 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Mahatma Gandhi - TN govt
tn rainy
seeman kanimozhi
Ind vs Eng 4th T20 Matc
America Plane Crash
hardik pandya IND V ENG
jananayakan overseas rights