தூய்மைப் பணியாளர்களுக்கு நற்செய்தி – தலைமை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு!

Default Image

தூய்மைப் பணியாளர்கள் பணியினிடையே அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் இருக்கை ஏற்பாடு செய்யுமாறு தலைமைச் செயலாளர் உத்தரவு.

ஒவ்வொரு அலுவலகத்திலும் தூய்மைப் பணியாளர்கள் பணியினிடையே அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் இருக்கை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தும்,தூய்மை பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதை பற்றி பலரும் என் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட ஆட்சி தலைவர்கள் இதில் நேரடியாக தலையிட்டு பணிக்கு நடுவே அவர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதியவேளைகளில் உட்கார்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். புதிதாக கட்டப்படுகின்ற இடங்களிலும், அலுவலகங்களிலும் இத்தகையை வசதிகளை உள்ளடக்க திட்டவரைபடத்தில் மோதிய இடம் ஒதுக்குவது மிகவும் அவசியம். மேலும் செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி என் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமல்ல, மற்ற அலுவலகங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். தலைமை செயலாளரின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்