குட் நியூஸ்.! இதுவரை 15,762 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 861 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 15,762 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 861 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 15,762 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 12,697 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025