அங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
“அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்டத்தினை ஓர் அலகாக கொண்டு இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினையும், இனசுழற்சி முறையை கடைப்பிடிப்பது தொடர்பாக பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத் துறையால் அவ்வப்போது வெளியிடப்படும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
அதே சமயம்,அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்,குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது என்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பிட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும் இயக்குநர் அவர்கள் தனது கடிதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்களில், ஆதரவற்ற விதவைகள் / விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ள அரசாணைக்கு திருத்தம் வெளியிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும் இயக்குநர் அவர்களின் கருத்துருவினை கவனமுடன் அரசு பரிசீலனை செய்தது. பரிசீலனைக்குப் பின், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்,குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில், 25 விழுக்காடு பணியிடங்களை, இப்பணியிடங்களுக்கு மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
தகுதிகள் நிபந்தனைகளை நிறைவு செய்யும் விதவைகள்/கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு, முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்ப அரசு ஆணையிடுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…