27 ஆண்டுகளாக நாய்களை பாசமுடன் வளர்க்கும் நல் உள்ளம் கொண்ட பெண்மணி.
இன்று பலரின் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் என்றால் அது நாயாக தான் இருக்கும். அந்த வகையில், மதுரையை சேர்ந்த, அலங்காநல்லூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி தெருவில் வசித்து வருபவர் புஷ்பம் என்ற பெண்மணி.
இவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிற நிலையில், தனிமையில் வசித்து வரும் இவர், தெருவோரங்களில் வசித்து வரும் நாய்கள் அழைத்து வந்து அவைகளுக்கு உணவு மற்றும் இருப்பிடம் அமைத்து கொடுத்து பாசத்துடன் வளர்த்து வருகிறார். இவ்வாறு 15-க்கும் மேற்பட்ட நாய்களை பராமரிக்கும் இவர், அந்த நாய்கள் மரணிக்கும் தருவாயில் அவைகளுக்கு என்று உரிய இறுதிச்சடங்கும் செய்து வைக்கிறார்.
இந்த நாய்கள் குறித்து புஷ்பம் கூறுகையில், இவர் இத்தனை நாய்களை வளர்த்தும் ஒரு நாய்கூட யாரையும் தேவையில்லாமல் கடித்ததோ அல்லது துரத்தியதோ இல்லை எனக் கூறுகிறார். மேலும் இப்பகுதிக்கு யாராவது புதிதாக வந்தால், நாய்கள் அனைத்தும் ஒன்றுகூடி ஊரையே அழைத்து விடும் என கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…