சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,884க்கு விற்பனை.
அட்சயதிருதியைத் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தங்கம் விலை கடந்த 10 நாட்களாக குறைந்து வந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வரும் மே 3-ம் தேதி, அந்த அட்சய திரிதியை நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்துகொண்டே இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். எனவே கடந்த 19-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.40,200-க்கு விற்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தங்கம் விலை குறைந்த வண்ணம் இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,884க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.39,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.68.80க்கு வர்த்தகமாகிறது.
இதனிடையே, சென்னையில் ஆபரண தங்கத்தின் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.38,696க்கு விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,837க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,504 குறைந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.39,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திரிதியை நாள் நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது நகை விரும்பிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…