‘பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு பொன்னான நாள்’ – தங்கம் வென்ற சுமித்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!
டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சுமித்-க்கு முதல்வர் வாழ்த்து.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் சுமித் அண்டில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்ததை தொடர்ந்து, தங்கம் பதக்கம் வென்றார். இவர் 66.95, 68.08, 68.55 மீட்டர் கணக்கில் தன் சாதனையை ஒரே போட்டியில் 3 முறை முறியடித்து, தனி சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதில், ‘டோக்கியோ 2020, பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு பொன்னான நாள். ஒரே நிகழ்வில் மூன்று சாதனை படைத்து, தங்க பதக்கம் வென்ற சுமித் அன்டிலை நான் வாழ்த்துகிறேன். இது உண்மையிலேயே விதிவிலக்கானது.’ என பதிவிட்டுள்ளார்.
Golden day for India at #Tokyo2020 #Paralympics. I congratulate Sumit Antil for clinching #Gold in #Javelin F64 with three record throws in the same event. It’s truly exceptional. pic.twitter.com/pf0y7iCp6X
— M.K.Stalin (@mkstalin) August 30, 2021