“தமிழகத்தில் பொற்கால ஆட்சி ஆரம்பமாகிவிட்டது” – வைகோ புகழாரம்..!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ள 5 முக்கிய திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால், தமிழகத்தில் பொற்கால ஆட்சி ஆரம்பமாகிவிட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழ்ந்து கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.

மேலும்,முதல்வர் மு.க. ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.அதன்பின்னர்,தலைமைச் செயலகம் வந்து முதல்வர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த திட்டங்கள் பற்றிக் கூறுகையில்,”முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கும் கோப்பில்  தனது முதல் கையெழுத்திட்டார்.அதன்படி,கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2000 ரூபாய் இந்த மாதமே வழங்கப்படும்.

இரண்டாவதாக,ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்து ஏழை மக்களின் உள்ளங்களை குளிரச் செய்துள்ளார்.

அடுத்ததாக,அனைத்து மகளிரும் நாளை முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில்  இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரனோ பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் அதன் முழுக்கட்டணமும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,மக்கள் குறைகளுக்கு உடனடியாக  தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 5 முக்கிய திட்டங்கள் மூலம் முதல்வர் ஸ்டாலின் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று எதிரிகளை திடுக்கிட செய்துள்ளார்.

மேலும்,தமிழ்நாட்டில் ஐந்து என்பதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.ஏனெனில்,நிலம்,நீர்,காற்று,ஆகாயம் மற்றும் நெருப்பு போன்ற ஐந்தையும் இயற்கையின் அமைப்பாக தமிழர்கள் வகுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல்,தமிழ் இலக்கியங்களில் ஐம்பெருங்காப்பியங்கள் தனிச்சிறப்பை பெற்றுள்ளன.

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு,திருச்சி மாநாட்டில் திமுகவின் அடிப்படை கொள்கைகள் ஐந்தினை கலைஞர் கூறினார்.

அந்த வரிசையில்,முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்த ஐந்து திட்டங்கள்,தமிழகத்தில் இனி வரும் ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கு சான்றாகும்”,என்று புகழ்ந்து கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji
suryakumar yadav vk orange cap
Omar Abdullah About Pahalgam Attack
selvaperunthagai