சென்னை விமான நிலையத்தில் தங்கக்கடத்தல்..! பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்..!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பாங்காக் மற்றும் கொழும்புவில் இருந்து சென்னை வந்த 5 பயணிகள் 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.
சுங்க அதிகாரிகள் பயணிகளிடம் நடத்திய சோதனையில் இவர்கள் 5 பேரிடம் இருந்து 3,993 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ஆகும். தற்பொழுது தங்கத்தை கடத்தி வந்த 5 பேரிடம் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.