திருச்சி: பற்பசை மற்றும் லக்கேஜில் ரூ.11லட்சம் மதிப்பிலான தங்கத்தைமறைத்து சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த வாலிபரை திருச்சி ஏர்போர்ட்டில் சுங்கத்துறையினர் பிடித்தனர்.சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு ஸ்கூட் டைகர் விமானம் நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக திருச்சி சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததன் அடிபடையில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை பரிசோதித்தனர். அதில் சிவகங்கையை சேர்ந்த முகமதுமீரா என்ற வாலிபரின் உடமைகளை பரிசோதித்தபோது, பேஸ்ட் மற்றும் அவரது லக்கேஜில் மறைத்து ரூ.11 லட்சத்து 92,084 மதிப்புடைய 378 கிராம் தங்கம் இருந்தது. இதையடுத்து, அவரிடம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…