திருச்சி விமான நிலையத்தில் ரூ.11லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது..,
திருச்சி: பற்பசை மற்றும் லக்கேஜில் ரூ.11லட்சம் மதிப்பிலான தங்கத்தைமறைத்து சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த வாலிபரை திருச்சி ஏர்போர்ட்டில் சுங்கத்துறையினர் பிடித்தனர்.சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு ஸ்கூட் டைகர் விமானம் நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக திருச்சி சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததன் அடிபடையில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை பரிசோதித்தனர். அதில் சிவகங்கையை சேர்ந்த முகமதுமீரா என்ற வாலிபரின் உடமைகளை பரிசோதித்தபோது, பேஸ்ட் மற்றும் அவரது லக்கேஜில் மறைத்து ரூ.11 லட்சத்து 92,084 மதிப்புடைய 378 கிராம் தங்கம் இருந்தது. இதையடுத்து, அவரிடம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.