Gold Rate : தங்கம் விலை 2-வது நாளாக சரிவு !
தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் ஆபரணத்தங்கம் ஏறுமுகமாகவே இருந்தது,இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஒன்றிய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தியது.அதன் பின்பு 38 ஆயிரத்தை தாண்டிய தங்கமானது நேற்று முதல் 37 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது.
தங்கம் விலை இரண்டாவது நாளாக இறக்கத்தை கண்டுள்ளது,நேற்று(ஜூலை 6) பவுனுக்கு ரூ.540 குறைந்த நிலையில், இன்று (ஜூலை 7) பவுனுக்கு ரூ.544 ஆகா குறைக்கப்பட்டு ரூ.37,376க்கு விற்பனையாகிறது. மேலும் 1கிராம் தங்கம் ரூ.4672க்கு விற்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கமானது ரூ.1064 குறைந்து உள்ளது.
இதைபோல் இன்று வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியானது 10 காசுகள் குறைந்து ரூ.62.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1கிலோ வெள்ளி 62,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.