வார தொடக்க நாளில் உயர்ந்த தங்கம் விலை.!
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு.
பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு. இத்தகைய தங்கம் விலையில், நாளுக்குநாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.43,760க்கும் ஒரு கிராம் ரூ.5,470க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி 70 காசு உயர்ந்து ரூ.75.20க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை, இன்று உயர்ந்துள்ள காரணத்தால் இல்லத்தரசிகள் கடும் அப்செட் அடைந்துள்ளனர்.