உடனே போங்க…இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி.! தங்கம் விலை கடும் வீழ்ச்சி.!
ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று சென்னை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இன்றைய நிலவரம்:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,565க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 77.70 -க்கும், கிலோ வெள்ளி ரூ.77,700க்கும் விற்பனையாகிறது.
நேற்றய நிலவரம்:
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,840 என விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5605 க்கு விற்பனையானது. அதைப்போல, வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78.000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.