அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது.
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.
அந்த வகையில், இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.44,840க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,605-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை, 90 காசுகள் குறைந்து ரூ.80.40-க்கு விற்பனை விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,565க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,320க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
அட்சய திருதியை:
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் தொடர்ந்து வீட்டில் செல்வம் வளம் பெரும், நிறைய தங்கம் வாங்கும் யோகம் கிடைத்து தங்கம் சேரும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில், அட்சய திருதியை முன்னிட்டு, இன்று முன்கூட்டியே தங்கத்தின் விலையை மாற்றி அமைத்த வணிகர்கள். எப்போதும், தங்கவிலை 9 மணிக்கு மேல் நிர்ணயித்து வந்த நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு இன்று காலை 7.29க்கு விலையை மாற்றி அமைத்துள்ளனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…