தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ரூ.44,800 என விற்ற ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.44,840 என விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5605 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைப்போல, வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78.000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.