தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு!
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று சாற்று அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரண் 44,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை, ஒரு கிராம் 80 ரூபாய் 70 காசுகளுக்கும் , ஒரு கிலோ 80,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,500 ரூபாய்க்கும், ஒரு சவரண் 44,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை, ஒரு கிராம் 80 ரூபாய் 20 காசுகளுக்கும் , ஒரு கிலோ 80,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.