ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,978-க்கும், ஒரு சவரன் ரூ 71,824-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, இன்று காலையில் கிராமுக்கு ரூ.110 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது.
2025-2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கலான காரணத்தினால், இந்த விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 14) காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,230க்கும், சவரன் வரலாறு காணாத வகையில் ரூ.65,840க்கும் விற்பனையானது.
இன்று காலை 1 கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்தது, பின்னர் மாலை ரூ.70 அதிகரித்துள்ளது. அதாவது, 1 கிராம் விலை இன்று ஒரே நாளில் ரூ.180 உயர்ந்தது. இதையடுத்து, 1 கிராம் தங்கம் ரூ.8,300ஆகவும், சவரன் ரூ.66,400ஆகவும் விற்கப்படுகிறது. 1 சவரன் தங்கம் விலை ரூ.66 ஆயிரத்தை தாண்டியது, நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வெள்ளி விலை
அதேபோல் வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.2 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ரூ.112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,12,000க்கும் விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம்
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,978-க்கும், ஒரு சவரன் ரூ 71,824-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025