பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க ஆபரணம்..!
புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்பு முனை கருவி, வட்ட வடிவ கார்னீலியன் பாசி மணி கிடைத்ததுள்ளன.
தமிழ்நாடு அரசு அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ள நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு செய்ய தமிழ்நாடு அரசின் உத்தரவையடுத்து கடந்த மே 20ந் தேதி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அகழாய்வு தொடங்கிய சில நாட்களிலேயே செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதனையடுத்து, அந்த இடத்தில அரியவகை பழமையான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்பு முனை கருவி, வட்ட வடிவ கார்னீலியன் பாசி மணி ஆகிய பொருட்கள் கிடைத்துள்ளன.