#Gold: தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு! சவரனுக்கு ரூ.328 அதிகரித்தது.!
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,191-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,191-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.328 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,528-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50 க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.