தீபத் திருவிழா ! இதைக்கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் பரிசு
- திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகா தீபத் திருவிழா நடைபெறுகிறது.
- தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை,சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம் மிகவும் பிரசித்தி பெற்றது.கடந்த 1 ஆம் தேதி மகா தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.வருகின்ற 10 ஆம் தேதி மகா தீபமும் ,11-ஆம் தேதி கிரிவலமும் நடைபெறுகிறது.இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
இதனையொட்டி தமிழக மாசுக்கப்பட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை,சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசாக வழங்கப்படும்.துணிப் பை,சணல் பை கொண்டு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் அது கணினி மூலமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலுக்கல் முறையில் தேர்வாகும் 84 பேருக்கு 2 கிராம் தங்கம், 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும்.இதில்,குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படும் 12 பேருக்கு 2 கிராம் தங்கம் வழங்கப்படும் என்றும் 72 பேருக்கு 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.