தற்போதைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை..!
தற்போதைய நிலவரப்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். அனைவராலும் பெருமளவில் மதிக்கப்படும் தங்கம், மக்களின் மிகப்பெரிய சொத்தாகவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பெருமளவில் உதவுகிறது. இத்தகைய குணமுள்ள தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.
தங்கம் விலை:
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.41,680-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.90 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.00 க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.900 குறைந்து ரூ.70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.