கோகுல்ராஜ் கொலை வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜரானார் சுவாதி!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை இன்று ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டிருந்தது.
அப்போது நீதிபதி கூறுகையில், நீதித்துறை மனசாட்சியை திருப்திப்படுத்த தானாக முன்வந்து சுவாதியை விசாரிக்க விரும்புகிறது. கோகுல்ராஜ் கொலைக்கு முன்பாக சுவாதியுடன் நட்பில் இருந்ததுதான் வழக்கின் முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பை நாமக்கல் காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், சுவாதியை யாரும் சந்திக்கவோ, செல்போனில் பேசுவதோ கூடாது என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். சுவாதி எவ்வித பயமும், அச்சுறுத்தலும் இன்றி நீதிமன்றம் வருவதை உறுதி செய்ய வேண்டும் என விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தியது காவல்துறை. போதிய பாதுகாப்பை சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை காவல்துறை ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.