கோகுல்ராஜ் கொலை வழக்கு: தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்கு..!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு சாகும் வரை சிறை 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தண்டனையை ரத்து செய்ய வழக்கு:
இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டார். பின்னர், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில்,கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும், அதுவரை ஜாமின் வழங்ககோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சிபிசிஐடி மற்றும் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.