கடவுளே! திமுக – காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னமும் பெண்களை இழிவுபடுத்துவார்கள் – பிரதமர் மோடி உரை

Published by
பாலா கலியமூர்த்தி

முதல்வரையும் தாயாரையும் இழிவுபடுத்தி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு வெள்ளி வேலை நினைவு பரிசாக மாநில தலைவர் எல் முருகன் வழங்கினார்.

இதனைதொடந்து பொதுக்கூட்டத்தில் வெற்றி வேல்- வீரவேல் என முழக்கமிட்டு பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் பெருமைக்குரிய பழமையான பகுதி தாராபுரம். தமிழகத்தின் கலாசாரம் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. ஐ.நா.சபையில் தமிழில் உள்ளவற்றை மேற்கோள் காட்டி பேசியது முக்கியமான தருணம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் புதிய சட்டசபை அமைய உள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் வாக்குகள் கேட்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் லட்சியத்தால் உத்வேகம் பெற்றிருக்கிறோம். உறுதியாக இருக்கிறோம். தாராபுரம் பகுதி மக்கள் நீண்ட காலமாக ரயில் பாதை கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று கூறியுள்ளார்.

மருத்துவ கல்வி உள்ளிட்டவற்றை தாய்மொழி கல்வியில் கற்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தின் மொழி, கலாசாரத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி வாரிசு திட்டத்தையே முன்வைக்கின்றன என விமர்சித்தார்.

தமிழக மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். பெண்களை அவமதிக்கும் எந்த போக்கையும் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலைவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். முதல்வர் பழனிசாமியின் தாயாரை இழிவாக பேசி இருக்கின்றனர். கடவுளே! திமுக – காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னமும் பெண்களை இழிவுபடுத்துவார்கள்.

பெண்களை இழிவுபடுத்துவதுதான் திமுக- காங்கிரஸ் கலாசாரம். பெண்களை மிக கேவலமாக பேசியிருக்கிறார் திண்டுக்கல் லியோனி. முதல்வரையும் தாயாரையும் இழிவுபடுத்தி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். திமுக இளவரசர் உதயநிதி, மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டி நடுநாயகமாக இருக்கிறார். 1989 மார்ச் 25ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதாவை திமுகவினர் தாக்கியதை மறக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை தேசிய ஜனநாயக கூட்டணி முன்வ்வைக்கிறது. ஆண்டாள், அவ்வையார் லட்சியத்தால் உத்வேகம் பெற்றவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள். கொங்குபகுதி மக்கள் மரியாதை, செல்வத்தை நாட்டுக்கு அளித்து வருகின்றனர். தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ராணுவ கவசம் வட எல்லையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. சிறு குறு தொழில்கள் என்பதன் வரையறையை மத்திய பாஜக அரசு மாற்றி எளிதாக்கி இருக்கிறோம். உலகத்தரம் வாய்ந்த பொம்மைகளை தயாரிக்கும் மையமாக இந்த பகுதி மாற இருக்கிறது.

திமுக, காங். ஊழல் கண்கள் தொழில் வளர்ச்சியை விரும்பாது. விவசாயிகளுக்கு மரியாதை தருகிறது திருக்குறள். பாஜகவின் தேர்தல் அறிக்கையை விரிவாக படித்து பாருங்கள். தமிழகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் சாத்தியமானதை செய்வோம் எனவும் உறுதி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…

6 hours ago

2026-ல் கூட்டணி ஆட்சியா.? கையெடுத்து கும்பிட்டு கிளம்பிய திருமா.!

அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…

6 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

7 hours ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

7 hours ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

8 hours ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

8 hours ago