தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், மாணவிக்கு அவர் பயின்ற பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் மூலம், பாலியல் தொந்தரவு இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், போலீசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து அப்பள்ளி முதல்வர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்தது. சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், பெங்களூரில், தலைமறைவாக இருந்த நிலையில், மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின், மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்திய நிலையில், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் அவர்கள், மாணவியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நினைத்தாலே மனம் பதறுகிறது, கோவை பள்ளி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார், அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன், கடவுளே! இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாது! இந்த இழப்பை தாங்கிக்கொள்ள மாணவியின் பெற்றோருக்கு மன தைரியத்தை கொடு!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…