இந்திய அளவில் #GoBackStalin ஹேஸ்டேக் ட்ரெண்டிங்..!
டுவிட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையை விட கோவை மாவட்டம் தான் தினமும் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக, கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இந்த ஹேஸ்டேக்கில் ஒரு பகல் ஒரு மணிவரை 167k ட்வீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ட்விட்டரில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது #GoBackmodi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.