#Gobackmodi-ஹேஷ்டேக்கை அதிக பயன்படுத்திய நாடு ? இந்தியா 22% பயன்படுத்தியுள்ளது…!
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.
இந்நிலையில், நரேந்திர மோடி தமிழகம் வருவதை பிடிக்காத சிலர் ட்விட்டரில் #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாகி வருகின்றனர். இதில் பல நாடுகளும் இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினர். இந்த ட்ரெண்டில் 59% – அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்தும், 15% – அரபு நாடுகளில் இருந்தும், 22% – இந்தியாவில் இருந்தும் ட்ரெண்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வெறும் 22% மட்டுமே என்பது ஆச்சரியம்.