கடலூரில் அரசு தடைகளை மீறி நடத்தப்பட்ட ஆட்டு சந்தை – கோடிக்கணக்கில் விற்கப்பட்ட ஆடுகள்!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் எதிரொலியாக பல மாநிலங்களில் கோழிக்கறி விலை சரிந்தது. இந்த வைரஸ் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் சுலபமாக பரவுக்கூடும் என்பதால் கல்வி நிலையங்கள்,மால்கள்,திரையரங்குகள், கோவில்கள், வார சந்தைகள், ஆட்டுசந்தைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அந்த உத்தரவை மீறி தற்போது கடலூரில் ஆட்டுசந்தை நடத்தப்பட்டுள்ளது.ஒரு நாள் நடத்தப்பட்ட இந்த ஆடுகள் சந்தை விற்பனை 2.50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவ்வாறு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு corona பரவுவதை தடுக்க தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இங்கு நடத்தபட்டிருக்கும் செயல் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.