“தமிழகத்தில் தினமும் 2 லட்சம் கொரோனா தடுப்பூசி போட இலக்கு”- சுகாதாரத்துறை!

Default Image

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு தினமும் 2 லட்சம் கொரோனா தடுப்பூசி போட இலக்கை சுகாதாரத்துறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து, நாள் ஒன்றுக்கு 1.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது.

அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் இன்று முதல் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. மேலும், தமிழகத்தில் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இந்த தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, கடந்த ஜனவரி 16-ம் முதல் 600 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

1.39 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 37.32 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில், இந்த தடுப்பூசி திருவிழாவின் பொது தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு தினமும் 2 லட்சம் கொரோனா தடுப்பூசி போட இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்துவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில், தடுப்புசி போடாதவர்களை வீடு வீடாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறதாகவும், அந்தந்த மாட்டத்தில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்