ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பதால் விழுந்து விடுவார்கள்..! இளைஞரின் திடுக்கிடும் வாக்குமூலம்..!

Default Image

சேலம் மாவட்டம் மேட்டூரை சார்ந்த சபரி அபிஷேக். பட்டதாரி இளைஞரான  இவர் கடந்த வாரம் திருவக்கவுண்டனூர் பகுதியில்  கல்லூரி மாணவி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாணவியின் பெற்றோர்கள் அபிஷேக்கை பிடித்து மிரட்டி கொண்டிருந்தன. இதை கவனித்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது  அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி போலீசாரிடம் அழுதபடி கூறினார். இதைதொடர்ந்து சபரியின் செல்போனை போலீசார் வாங்கி பார்த்ததில் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அதில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை பார்த்தனர். பின்னர் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு சபரியை அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

சபரி கூறுகையில் , நான் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். அதனால் என்னுடைய முதல் பார்வையிலேயே மாணவிகள் விழுந்து விடுவார்கள். பிறகு அவர்களிடம் செல்போன் நம்பரை வாங்கி இரவு நேரத்தில் அவர்கள் மனதை கவரும் விதமாக பேசுவேன்.

விடுமுறை நாட்களில் ஹோட்டலுக்கு அல்லது வெளியூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக கூறி அவர்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வேன். பின்னர் அதை வீடியோவை எடுத்து அவர்களை மிரட்டி பணம் கேட்பேன் என கூறினார்.

சபரி செல்போனில் ஆறு பெண்களை பாலியல் கொடுமை செய்த வீடியோ இருந்ததாக சேலம் காவல்துறை தெரிவித்தனர். மேலும் அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சபரியை மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்