சென்று வா..! வெற்றி நமதே..! – மகனை வாழ்த்திய விஜயகாந்த்…!
தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில், விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். முதல்முறையாக விருப்பமனு தாக்கல் செய்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழகத்தில் இன்னும் கொஞ்ச நாட்களில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி வருகிறது. இதனையடுத்து, தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் விருப்பமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, விஜய பிரபாகரன் விருப்பமனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில், விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். முதல்முறையாக விருப்பமனு தாக்கல் செய்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். மேலும், அவரிடம் செய்தியாளர்கள், விருப்பமனு தாக்கல் செய்ய வரும் போது கேப்டன் என்ன சொன்னார் என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், ‘சென்று வா..! வெற்றி நமதே…!’ என வழ்த்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், நான் எந்த தொகுதியில் நின்றாலும், தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.