உலக முதலீட்டாளர்கள் மாநாடு – இன்று 2-ஆம் நாள் அமர்வு!

Global Investors Meet 2024

சென்னை நந்தனத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நேற்று தொடங்கியது. அப்போது, டாடா, டிவிஎஸ், ஹூண்டாய், கோத்ரேஜ், குவால்காம், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. உலக முன்னணி நிறுவன தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2-ஆம் நாள் அமர்வு இன்று 10 மணிக்கு தொடங்குகிறது.

டாடா நிறுவனத்துடன் ரூ.12,082 கோடி ஒப்பந்தம்.. 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு..!

மின்சார வாகனம், விவசாயம், உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமர்வு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டின் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பு பிற்பகல் 1 மணிக்கு நடைபெற உள்ளது. மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின்றன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதி நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளான நேற்று 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், கடைசி நாளான இன்று 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த மாநாட்டில் உள்ள அரங்குகளில் நடைபெறும் நிகழ்வை மாணவர்கள், பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்