ஜூலை 4ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வலியுறுத்தலின் பெயரில் ஜூலை 4-ஆம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த ஒரு ஆண்டில் 2.26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 132 நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் மேலும் 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
38 நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோவை மற்றும் மதுரையில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைய உள்ளது. தென் தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 750 கோடி அளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை மட்டுமல்லாமல் நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜூலை 4-ஆம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.