பாஜக பரிந்துரையின் பேரிலேயே ஜி.கே. வாசனை, அதிமுக தேர்தெடுத்துள்ளது – திமுக எம்.பி சர்ச்சை ட்வீட்
அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கி, அவரை வேட்பாளராக அதிமுக சமீபத்தில் அறிவித்துள்ளது. இதனால் பாஜக பரிந்துரையின் பேரிலேயே மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜி.கே. வாசனை, அதிமுக தேர்ந்தெடுத்துள்ளதாக திமுகவைச் சேர்ந்த தருமபுரி எம்.பி. செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.
GKவாசன்க்கு பிஜேபி பரிந்துரையில் ராஜ்ய சபா சீட்
விரைவில் பிஜேபியில் இணைய இருக்கிறார்.எனது புரிதலில் தமிழக தலைவராக வாசன் நியமிக்கப்படவுள்ளார்
அப்போ இவ்வளவு நாட்கள் தொண்டை கிழிய கத்துன ஓயாமல் பலன் எதிர்பார்த்து ஆதரவு குடுத்த எங்க தமிழக பாஜக தலைவர்கள் கதி
என்ன கொடுமை Sir இது????
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 9, 2020
மேலும் ஜி.கே வாசன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறியுள்ள செந்தில் குமார், தமிழகத்தில் காலியாக உள்ள பாஜக தலைவர் பதவிக்கு ஜி.கே வாசன் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக ஜி.கே வாசன் நியமிக்கப்பட்டால், இதுநாள் வரை பாஜகவிற்காக உழைத்த நிர்வாகிகளின் கதி என்னவாகும் என்றும் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.