குஜராத்தில் வரலாறு காணாத வெற்றி.! பிரதமர் மோடிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து.!
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் டிவீட் செய்துள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகுதிகளில் வென்று 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தல் வெற்றிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரதமர் மோடிக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட டிவிட்டீல், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சிக்கும், அதற்கு அடிப்படை காரணமாக விளங்கிய முன்னாள் முதல்வர் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் என ஜி.கே.வாசன் பதிவிட்டுள்ளார்.
#குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக வெற்றிபெற்ற #பாரதிய_ஜனதா_கட்சிக்கும், அதற்கு அடிப்படைக்காரணமாக விளங்கிய முன்னாள் முதல்வர், பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.#gkvasan #tmc #GujaratElectionResult #BJP pic.twitter.com/MhW9H5Ttr7
— G.K.Vasan (@TMCforTN) December 9, 2022