ரேஷன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல – கமல்ஹாசன்
ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரூ.2500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் குற்றச்சாட்டப்பட்டு வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. சிலர் பொங்கல் பரிசு கொடுப்பது குறித்து விமர்சனம் செய்தனர். அந்த வகையில், தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல.
தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம். ஒரிஜினல் நரிகள் மன்னிக்க என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம். ஒரிஜினல் நரிகள் மன்னிக்க.
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2021