விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போனதாக சரித்திரமில்லை – வி.கே. சசிகலா

Published by
பாலா கலியமூர்த்தி

எந்தவித இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நம் கட்சியினருக்கு தான் இருக்கிறது என சசிகலா அறிக்கை.

தேவர் சிலைக்கு ஜெயலலிதா வழங்கிய தங்க கவசத்தை அணிவித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விகே சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம்பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருப்பவர். அவர் பிறந்த நாளான அக்டோபர் 30-ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அவ்வாறு நடைபெறுகின்ற தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு, தேவர் திருமகளாருக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்காக, புரட்சித்தலைவி அம்மாவும், நானும் கடந்த 30.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்கு சென்று இருந்தோம். அச்சமயம் எங்களிடம் தேவர் திருமகளாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அங்கே குழுமியிருந்த மக்களும், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை கழகத்தின் சார்பாக செய்து புரட்சித்தலைவி அம்மா அவரிகள் கடந்த 09.02.2014-ம் தேதி வழங்கினார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை சிறப்புடன் கொண்டாடுகிற வகையில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு தங்ககவசம் அணிவிக்கப்படுகிறது.  தேவர் திருமகளாருக்கு வழங்கிய தங்கக்கவசத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் உள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்து தேவர் ஜெயந்தி விழாவின் போது எடுத்து அணிவிக்கப்படுகிறது.

இது ஒரு வழக்கமான நடைமுறை தாள், இது புரட்சிதலைவி அம்மா அவர்களால் வழங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டு இருக்கிறது. இதில் என்றைக்கும், எந்தவித இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நம் கட்சியினருக்கு தான் இருக்கிறது. விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போனதாக சரித்திரம் இல்லை என்பதை கழகத்தினர் அனைவரும் மனதில் வைத்து, தொடர்ந்து மேற்கொண்டுவரும் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, சமூக நீதிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த தேவர் திருமகனாருக்கு தங்கக்கவசம் அணிவித்து, எதிர்வரும் தேவர் ஜெயந்தி விழாவினை அனைவரும் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

9 minutes ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

39 minutes ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

46 minutes ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

1 hour ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

2 hours ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

2 hours ago