மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்பவருக்கு பாஸ் கொடுங்கள்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கடைகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், தாசில்தார்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக அத்தயாவசிய தேவைகளை பெற வெளியே செல்வோருக்கு பாஸ் கொடுக்க அறிவுறுத்துங்கள் என மாற்றுத்திறனாளிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.