இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்திற்கும், ஒரு கோடி ரூபாய் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நிவர் புயல் தாக்கியபோது காஞ்சிபுரம் அருகே உள்ள ஈச்சம்பாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் மின் நிலைய அதிகாரியான திரு சுந்தரராஜன் உதவி பொறியாளர் அவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவசர வேலை என்பதால், பக்கத்து மின் நிலையத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்த பாக்கியநாதன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் தயாளன் ஆகியோர் இருவரையும் சரிசெய்ய கூறியுள்ளனர். அந்த விவரத்தை சக பணியாளர்களுக்கு அவர் தெரிவிக்காத நிலையில், இருவரும் இரவு 11:30 மணியளவில் டார்ச்லைட் உடன் மழை நீர் தேங்கி இருந்த பகுதிக்கு சென்று, அறுந்து விழுந்த வயர்களை சுற்றிக் கொண்டிருக்கும் போது, மின் நிலையத்திற்கு வந்த மற்றொரு பணியாளர் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இந்த மின்சாரம் பாய்ந்தது பாக்கியநாதன் மற்றும் தயாளன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உதவி பொறியாளர் சுந்தரராஜன் அவர்களின் கவனக் குறைவால் இந்த சம்பவம் நடைபெற்றதால், சுந்தரராஜன் உள்ளிட்ட 4 பேரை தமிழக அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இரண்டு குடும்பத்தினரிடமும் மூன்று லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணியின் போது இறந்த காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் வழங்குகிறது. எனவே பேரிடர் பணியின்போது இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்திற்கும், ஒரு கோடி ரூபாய் மறுவாழ்வு நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வைகோ அவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…