பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்குக – ஓபிஎஸ்
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ரூ.3000 ரொக்கமாக வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக, கடந்த 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரகளுக்கும் சுமார் 12,00 கோடி மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆணையிட்டது. ஆனால், இந்த பொருட்கள் தரமற்றவை என்றும் 21 பொருட்கள் என்பதற்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக குற்றசாட்டியுள்ளார்.
மக்களுக்கான திட்டங்களை அறிவிப்பது மட்டும் போதாது. அந்த திட்டங்கள் மற்றும் பழங்கள் முழுவதும் மக்களை சென்றடைகிறது என்பதை உறுதி செய்யும் பொறுப்பும், கடமையும் அரசிற்கு உண்டு. ஆனால், சென்ற பொங்கல் திட்டத்தின்போது கடமையை சரிவர நிறைவேற்ற திமுக அரசு தவறிவிட்டது. எனவே, இந்தாண்டு பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்துவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3000 ரூபாய் ரொக்கமாக வழங்க திமுக அரசை வலியுறுத்தல்! pic.twitter.com/CeHAIs1j4w
— O Panneerselvam (@OfficeOfOPS) December 15, 2022