“எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” – பறை இசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..!
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா பறை இசைத்து வீதி வீதியாக சென்று, கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியினரும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா பறை இசைத்து வீதி வீதியாக சென்று, “எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.