அக்டோபர் 31க்குள் 50 லட்சம் தடுப்பூசியை வழங்குங்க! – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்துக்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்.
அதில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்காக வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழநாட்டுக்கு இதுவரை போதிய தடுப்பூசிகளை வழங்கி வரும் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் தடுப்பூசி போடுவதில் தேசிய சராசரியை விட தமிழநாடு குறைவாகவே உள்ளது. இதனால் அக்டோபர் 31ம் தேதிக்குள் தமிழ்நாட்டுக்கு 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடா தொடங்கிய முதல் 4 மாதங்களில் குறைவாக போட்டதாலேயே தமிழ்நாட்டின் சராசரி குறைவாக உள்ளது. கடந்த கால பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் கூடுதலாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் வாரத்திற்கு 6 நாட்களுக்கு தினமும் 5 லட்சமும், 7வது நாள் 20 லட்சம் தடுப்பூசிகளை போட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.