கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்.. நிதியுதவி அறிவித்த முதல்வர்..!

cm stalin

CM Stalin  கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

READ MORE- குலசையில் இருந்து விண்ணில் பாய்ந்தது ரோகிணி ராக்கெட்!

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நீண்டகரை “ஆ” கிராமம், பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02.2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் சஜிதா (வயது 13) மற்றும் தர்ஷினி (வயது 13) ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்ததனர்.

READ MORE- பிரதமர் உரை… அதுதான் அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்.! கனிமொழி எம்பி பேட்டி.!

அப்போது எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்