சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
மதுரை தனியார் மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து அப்பள்ளி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 4 வயது சிறுமி ஆருத்ரா பள்ளி வளாகத்தில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி தாளாளர் திவ்யாவை கைது செய்தனர்.
மேலும், 6 ஆசிரியர்கள் மற்றும் 2 பணியாளர்கள் என 8 பேர் மீது விசாரணை நடைபெற்றது. பின்னர் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து சிறுமி உயிரிழந்த அந்த தனியார் மழலையர் பள்ளிக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது பள்ளியின் உரிமைத்தை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து அதற்கான நோட்டீஸ் அப்பள்ளியில் ஒட்டப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025