காவலரின் அன்பால் சிறுமிக்கு நடந்த இதய அறுவை சிகிச்சைக்கு திரண்ட நந்தம்பாக்கம் காவல்நிலையம்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஐந்து வயது கொண்ட மகள்தான் கவிஷ்கா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக இவர்களின் வீடு அருகே நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில்குமார் குடி வந்துள்ளார். மேலும் அவரது குழந்தைகளுக்கு செந்தில்குமாரோடு மிக நெருங்கிய பழக்கம் ஏற்படவே நல்ல நட்புறவில் இரு குடும்பமும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவரை அணுகும் பொழுது இதயத்தில் பிரச்சினை உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 5 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் சிறுமியின் தந்தை கார்த்திக்கால் அந்த நேரத்தில் அவ்வளவு பணத்தை திரட்ட முடியவில்லை. இந்த கஷ்டமான சம்பவம் தலைமை காவலர் செந்தில்குமாருக்கு தெரியவே அவர் தன்னால் முயன்ற 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
மேலும் நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் தங்கராஜ்ஜிடமும் இது பற்றி கூறியுள்ளார். பின் இறுதியாக காவல் நிலையத்தை சேர்ந்த அனைவரும் சேர்ந்து 65 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை திரட்டி சிறுமியின் தந்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளனர். மேலும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தும் ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதி பணத்தை ஜில்கேர் எனும் தனியார் அமைப்பு கொடுத்து உதவியுள்ளது. சிறுமிக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. ஒரு சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக காவல் நிலையங்கள் மருத்துவமனை முன்பு திரண்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…