சிறுமி வன்கொடுமை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.
சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், இரு சகோதரர்களில் ஒருவருக்கு 10 ஆண்டுகள், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண வழங்க வேண்டும் என்றும் போக்சோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.