80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

Default Image

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்.

கடந்த மாதம் 29-ம் தேதி, பெண் ஒருவர் மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, அவர் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும்,  தனது  தாய் வசந்தா  என்பவர் சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கொரோனா காரணமாக அவர்களை அழைத்து வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், அவரை சென்னை, விமான நிலையம் வரை அழைத்து செல்ல உதவி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பெண் காவலர் மகாலஷ்மி என்பவரிடம் விவரத்தைக் கூறி அந்த மூதாட்டிக்கு உதவுமாறு கூறியுள்ளார்.

காவலர் மகாலஷ்மி, மூதாட்டி வசந்தா சுப்ரமணியத்தை நேரில் சந்தித்து விவரங்களை கூறி, தங்களது மகளை பார்க்க ஐதராபாத்திற்கு செல்ல ஜுலை 1-ம் தேதிக்கு மகள் விமான டிக்கெட்டு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த காவலர், வசந்தாவின் வீட்டிற்குச் சென்று அவரது உடைமைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு, தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்த தனியார் கார் மூலம் விமான நிலையத்தின் போர்டிங் வரை சென்று, உடைமைகள் மற்றும் பொருட்களுடன் நல்ல முறையில் மூதாட்டி வசந்தாவை விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

இவரது இந்த சேவைக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ள நிலையில், மூதாட்டி ஐதராபாத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு நல்லபடியாக வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் மூதாட்டியும் அவரது மகளும் பெண் காவலர் மகாலஷ்மிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூதாட்டியின் மகள், முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், நாங்கள் தமிழ்நாடு காவல் துறைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம், தன்னுடைய தொலைபேசி அழைப்பின் மூலம், எனது 80 வயதான தாய்க்கு, சொந்த செலவில் கார் ஏற்பாடு செய்து விமானநிலையத்திற்கு அழைத்து சென்று உதவிய மாம்பலம் காவல் நிலைய காவலர் மகாலஷ்மிக்கு  நன்றி என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்