மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி காதலர் தினத்தன்று தனது காதலன் நாகூர் ஹனிபாயுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 24-ஆம் தேதி மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்குபதிவு செய்து காவல் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அந்தச் சிறுமியை மயங்கிய நிலையில் சிறுமியின் காதலன் தாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் சிறுமியை அவரது பெற்றோர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டதால் தான் இறந்ததாக தகவல்கள் வெளியாகியது.
இதைத்தொடர்ந்து, சிறுமி கடத்தல் வழக்கில் நாகூர் ஹனிபா, தாய், தந்தை மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் தேடுவதை அறிந்து அந்த சிறுமியும், அவரது காதலனும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறந்த சிறுமியின் தாய்க்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலவளவு அரசு தொடக்க பள்ளியில் சமையலராக நியமித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…