சென்னையில் மளிகைக்கடையில் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி குடித்த சிறிது நேரத்தில் சிறுமி தரணி உயிரிழப்பு.
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் சதீஸ்,காயத்ரி தம்பதியின் இளைய மகளான 13 வயது தரணி என்பவர்,நேற்று மாலை அருகில் உள்ள ஒரு கடையில் பத்து ரூபாய் கூல்டிரிங்ஸ் பாட்டில் மற்றும் ரஸ்னா பாக்கெட் வாங்கி குடித்துள்ளார். குடித்த உடனே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,அவருக்கு வாந்தியும் ஏற்பட்டது.
இதனையடுத்து,அவரது சகோதரி அஸ்வினி தனது அம்மாவை அழைத்து வர சென்றிருக்கிறார்.பின்னர்,அவரது அம்மா வந்து பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்,இதனால்,அதிர்ச்சியடைந்த அவரது அம்மா,அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும்,அவரது உடல் நீல நிறத்தில் மாறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார்,சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.மேலும்,சிறுமி உட்கொண்ட கூல்டிரிங்ஸ் பாட்டில்மற்றும் ரஸ்னா பாக்கெட்டை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த சேகரித்துள்ளனர்.
இதனையடுத்து,இது குறித்த விபரத்தை அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று உறவினர்கள் கேட்டபோது,கடைக்காரர் அலட்சியமாக பதிலளித்துள்ளதாகவும்,மேலும்,மளிகைக்கடையில்,காலாவதியான பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்வதாக குற்றம் சாட்டி ,உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையை சோதனை செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து,சிறுமி உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…